கோணல் பக்கங்கள் 2 - சாரு நிவேதிதா .
ஒரு பத்திரிகையில் என் கட்டுரைக்காக மூன்று பக்கங்களை ஒதுக்கி ஆனால் மறதியாக கட்டுரையை விட்டு விட்டு என் மீது கடும் தாக்குதல். அதன் சாரம் என்னவென்றால் நான் ஒரு அலி! அதாவது sexual impotence காரணமாகத்தான் பாலியல் கதைகளாக எழுதி வருகிறேனாம்! இதையே விரிவாக விளக்கி மூன்று பக்கங்கள். அவந்திகாவிடம் வருத்த்தமாகச் சொன்னேன். நானிருக்க பயமேன் கண்ணே என்று அறுதல் சொன்னாள்.
மற்றொரு இணைய தள பதிதிரிகையில், குறிப்பிட்ட என் கட்டுரையை முன் வைத்து என் மீது கடும் வசைகள், அவதூறுகள். இதைச் செய்திருப்பவர் தமிழின் முன்னணி எழுத்தாளர்களில் ஒருவர். அவர் என்னைப் பற்றி அவதானித்துக் குறிப்பிட்டிருக்கும் ஒரு கருத்து-நான் எந்தப் பத்திரிகைக்கு எழுதுகிறேனோ அந்தப் பத்திரிகையை சிலாகித்து, அந்தப் பத்திரிகைக்கு ஏற்றாற்போல் எழுதுவேன் என்பது.
இந்த இடத்தில் நான் ஒரு உண்மையைச் சொல்லிவிட விரும்புகிறேன். நான் எழுதி வரும் இந்தக் கோணல் பக்கங்களைப் பலரும் நேரில் பாராட்டிச் சொல்கின்றனர். அனால் ஈ-மெயிலில் இதை விமர்சித்தே கடிதங்கள் வருகின்றன. ஒருவர் இந்தப் பக்கங்களை நிறுத்திவிடச் சொல்லி ஆசிரியருக்கு சிபாரிசு செய்திருந்தார்.
நிலைமை இப்படியிருக்கிறது. பொதுவாகவே நான் mainstream கருத்துக்களுக்கு எந்தவிதத்திலும் ஒத்துப் போகாதவன். இந்தப் பக்கங்களை வாசிப்பவர்கள் இதை மிக எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
No comments:
Post a Comment