Monetize Your Account... Plz Click Below the Banner

Friday 26 August 2016

விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் -ஏற்காடு இளங்கோ.


விண்வெளியில் சாதனை படைத்த சுனிதா வில்லியம்ஸ் -ஏற்காடு இளங்கோ.






பெண்கள் பல்வேறு துறைகளில் முன்னேறிக் கொண்டிருக்கின்றனர் எனக்கூறி பெருமைபடுகிறோம். ஆனால் நமது நாட்டின் மக்கள் தொகையுடன்   ஒப்பிடும் போது இது மிகக் குறைவான சதவிகிதம் என்பது தெரியவரும். சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்தியாவில் முதல் முறையாக பெண் ஜனாதிபதியும், பாராளுமன்றத்திற்கு பெண் சபாநாயகரும் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளனர். பெண் சமத்துவம் என்பது சட்டப் பூர்வமாக இருந்தாலும், அதன் பலன் முழுவதும் பெண்களைச் சென்றடையவில்லை என்பது நியாயமான கண்ணோட்டத்துடன் பார்த்தால் நன்குத் தெரியும்.

விண்வெளிக்கு செயற்கைக் கோள்களை வெற்றிகரமாக அனுப்பும் அளவிற்கு இந்திய நாடு வளர்ந்திருக்கிறது. சந்திரயான் விண்கலத்தை நிலவிற்கு அனுப்பி வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் நாம் விண்வெளி வீரர்களை விண்வெளிக்கு நமது சுய முயற்சியில் அனுப்புவதில் வெற்றி பெற முடியவில்லை. இந்தியாவின் முதல் விண்வெளி வீரர் ராகேஷ் சர்மா, சோவியத் ரஷியாவின் உதவி மூலமே சென்று வந்தார். அதன் பிறகு இதுவரை யாரும் விண்வெளிக்குச் செல்ல முடியவில்லை. 



ஆனால் வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு பெண்கள் விண்வெளிக்குச் சென்று வந்துள்ளனர். இவர்கள் இந்தியாவில் பிறந்திருந்தால் இந்த சாதனையைப் படைத்திருக்க முடியாது. சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் பல சாதனைகளைப் படைத்து பூமி திரும்பினார். சுனிதா வில்லியம்ஸ் இந்திய வம்சாவளி என்பதால் நாம் பெருமைப்படுகிறோம். அவரின் விண்வெளி சாதனை நமது குழந்தைகளுக்கும், பெண்களுக்கும், நாட்டு மக்களுக்கும் உற்சாகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

சுனிதாவின் சாதனைகளைப் படிக்கும் போது நமது மாணவர்களிடையேயும் ஏதாவது சாதனை புரிய வேண்டும் என்கிற ஆர்வம் உண்டாகும். அதற்கு இந்த நூல் அவசியம் உதவும் என நம்புகிறேன்.







No comments:

Post a Comment