Monetize Your Account... Plz Click Below the Banner

Friday 26 August 2016

உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் -ஏற்காடு இளங்கோ நூல்


உலகின் முதல் பெண் விண்வெளி வீரர் -ஏற்காடு இளங்கோ நூல்


இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர் என்னுமிடத்தில் மிகவும் புகழ் பெற்ற மகாலட்சுமி கோயில் உள்ளது. இக்கோயில் சாளுக்கிய மன்னர்களால் கட்டப்பட்டது. சாஹீ மகராஜ் கோலாப்பூவை ஆண்ட போது மகாலட்சுமி கோயில் கருவறைக்குள் பெண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.



கோயிலின் கருவறைக்குள் செல்ல ஆண்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. பெண் தெய்வத்தின் கோயில் கருவறைக்குள் பெண்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. பெண்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது. கருவறைக்குள் சென்று பூஜை செய்ய பெண்களுக்கும் அனுமதி தர வேண்டும் என ஏப்ரல் 2011இல் பெண்கள் கோயிலின் முன்பு போராடினார்கள். இப்படி கோயிலின் உள்ளே நுழைவதற்கான போராட்டங்கள் இந்தியாவில் தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

கோயிலின் உள்ளே ஒருவர் சென்று வருவது மிகவும் கடினமானது அல்ல. அது வீட்டின் உள்ளே சென்று வருவது போன்ற ஒரு சாதாரண செயல்தான். ஆனால் விண்வெளிக்குச் சென்று வருவது சாதாரண காரியம் அல்ல. அது மிகவும் சிக்கலானது, ஆபத்தானது. ஆனால் விண்வெளிக்கு பெண்கள் சென்று வருவதற்குத் தடை ஏதும் இல்லை. அறிவியல் ஆணையும்,பெண்ணையும் சமமாகவே கருதுகிறது. அறிவியலுக்கு சாதி, மதம், ஆண், பெண் என்கிற பாகுபாடு கிடையாது. இதைத்தான் முதன்முதலில் சோவியத் ரஷியா நிரூபித்துக் காட்டியது.

விண்வெளிக்குச் செல்வது பற்றி கனவு காண்பது என்பது எளிதானது. ஆனால் சென்று வருவது என்பது எளிதானது அல்ல. அது ஒரு சாதனை; சிரமமானது. ஈர்ப்பு விசைச் சிறைக்குள் இருந்து விடுபட்டு, எல்லையற்ற விண்வெளியில் நுழைவது சிரமமானது. விண்வெளிக்குச் செல்வதற்கு என்று கடினமான பயிற்சி தேவை. அதன் பின்னரே அவர் ஒரு விண்வெளி வீரர் என்கிறத் தகுதியைப் பெறுவார்.

விண்வெளிப் பயணம் தொடங்கிய காலத்தில் ஆண்கள் மட்டுமே செல்ல முடியும் எனக் கருதினர். ஏனெனில் ஆண் வலிமையானவர். அவரால்தான் விண்வெளியில் இருக்கும் ஆபத்தைச் சமாளிக்க முடியும் எனக் கருதினர். விண்வெளிப் பயணத்தில் முதல் வெற்றி பெற்ற சோவியத் ரஷியா அப்படி கருதவில்லை. ஆண், பெண் சமத்துவத்தை அது போற்றியது. பெண்களும் விண்வெளிக்குச் செல்ல முடியும் என ரஷிய விஞ்ஞானிகளும், அரசும் கருதின. ஒரு சோசலிச குடியரசு அப்படி நினைப்பது என்பது ஆச்சரியம் அல்ல. அது பழமைவாதிகளுக்கு வேண்டுமானால் விரோதமாக இருக்கலாம்.

சோவியத் ரஷியாவின் பெண் சமத்துவம் ஒரு பெண்ணையும் விண்வெளிக்கும் அனுப்பியது. உலகில் முதன் முதலில் பெண்ணை விண்வெளிக்கு அனுப்பிய நாடும் சோவியத் ரஷியாதான். முதன் முதலில் விண்வெளிக்குச் சென்று வந்த பெண் வாலண்டினா தெரஸ்கோவா ஆவார்.










1 comment: