Monetize Your Account... Plz Click Below the Banner

Tuesday 16 August 2016

சாண்டில்யனின் 10 சரித்திர நாவல்கள் இலவசமாக

பாஷ்யம் என்பது இவரது இயற்பெயர். மயிலாடுதுறைச் சார்ந்த கிந்தளூர் எனும் ஊரில் பிறந்தவர். கதைக்கும், கதை எழுதுபவரின் உருவத்திற்கும் சம்பந்தம் இருக்க வேண்டும் என்கிற நியதி என்றும் கிடையாது. என்றாலும் இவரது கதைகளைப் படித்து விட்டு, ஏதே கற்பனையில் இருந்த சிலர் இவரைப் பார்க்கச் சென்று, பார்த்து வியந்திருக்கிறார்கள் எனும் குறிப்புகளும் நமக்குக் கிடைக்கின்றன. ஆரம்பத்தில் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையின் நிரூபராகவும், பின்பு செய்தி ஆசிரியராகவும் பணியாற்றியிருக்கிறார். சிறிது காலத்திற்குப் பிறகு அதிலிருந்து விலகிய ‘சாண்டில்யன்’ இந்துஸ்தான் எனும் பத்திரிகையில் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.


இந்துஸ்தான் பத்திரிகையில் இருக்கும்போது தான் இவருக்கு சினிமா 
உலகுடன் தொடர்பு ஏற்பட்டிருக்கிறது. 1952ல் வெளிவந்த ‘அம்மா’ என்கிற படத்தின் திரைக்கதை வசனத்தை இவர் எழுதியிருக்கிறார்.
இதற்கு முன் 1949ல் ‘லேனா’ செட்டியாரின் ‘கிருஷ்ணபக்தி’ என்கிற படத்தில் ச.து.சு.யோகியார், சுத்தானந்த பாரதி ஆகியோருடன் இணைந்து வசனம் எழுதிய அனுபவமும் உண்டு. 1953ல் சித்தூர் வி.நாகையா தயாரிதத ‘என்வீடு’ என்கிற படத்திற்கும் சாண்டில்யன் வசனம் எழுதியுள்ளார்.

திரைப்பட உலகம் நிரந்தரமல்ல என்று அறிந்து வைத்திருந்த சாண்டில்யன் 

மறுபடியும் ‘சுதேசமித்திரன்’ பத்திரிகையில் வேலையில் அமர்ந்தார். அதில் ‘ஞாயிறு மலர்’ பகுதியை முழுமையாகக் கவனித்துக் கொண்டார். ‘உதயபானு, ‘இளையராணி’ போன்ற தொடர்புதினங்கள் இந்த மலரில் வெளிவந்தன.
இவரது புகழ்பெற்ற ‘ஜீவபூமி’ நாவல் ‘அமுதசுரபி’ இதழில் தொடராக வெளிவந்தது. பத்திரிகைத் தொழிலை தொழிற்சங்க அமைப்பினுள் 

கொண்டுவர வேண்டுமென்று குரல் கொடுத்த ஆரம்பப் பத்திரிகையாளர்களில் ‘சாண்டில்யன்’ மிகவும் முக்கியமானவர்.
அதேபோல் தமிழ் எழுத்தாளர் சங்கம் ஆரம்பிக்கப்பட்டபோது அதன் தொடக்கக் காலத்திலிருந்தே தொடர்பு கொண்டிருந்ததோடு சில முக்கிய நிர்வாகப் பொறுப்புக்களையும் வகித்திருக்கிறார்.
இவர் ஒரு கட்டத்தில் ‘குமுதம்’ வார இதழின் நட்சத்திர எழுத்தாளராக உருவெடுத்தார். இவரது சரித்திர புதினங்கள் பல ‘குமுதத்தில்’ தொடராக வெளிவந்தது. இவர் தொடர் வெளிவரும் காலத்தில் ‘குமுதத்தின்’ சர்குலேசன் மிக அதிகமாக இருக்குமாம்.

முக்கியமாக ‘குமுத’த்தில் இவர் எழுதிய கன்னிமாடம், யவனராணி, கடல்புறா போன்ற தொடர்கள் வெகுஜென வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றன.



இவரது மேற்கூறிய தொடர்களில் பெண்கள் பற்றிய வருணைகள் இணைஞர்களை வெகுவாகக் கவர்ந்தன. சிலர் இதை ஆபாச எழுத்து எனவும் கூறினார்கள். அதைப் பற்றியெல்லாம் சிறிதும் கவலைப்படாமல் 

‘சாண்டில்யன்’ எழுதிக் குவித்துக் கொண்டேயிருந்தார்.
இவர் எழுதிய நூல்களைப் பட்டியலிடுவது சற்று சிரமம்தான். இவர் எழுதிய சில முக்கயி நூல்கள். ராஜ பேரிகை, மதுமலர், மனமோகம், செண்பகத் தோட்டம், ஜீவபூமி, நங்கூரம், புரட்சிப்பெண், ஜலதீபம், ராஜதிலகம், ராஜமுத்திரை, கன்னிமாடம், கடல்புறா, யவனராணி மற்றும் ஸ்ரீராமானுஜர் வாழ்க்கை வரலாறு.
இவரது சரித்திரப் புதினங்களுக்கு இலக்கிய ரீதியாக பெரிய மதப்பொன்றும் இருப்பதாகத் தெரியவில்லை. தேர்ந்த இலக்கிய விமர்சனங்கள்தான் இதற்குச் சரியான பதிலைச் சொல்ல முடியும்.



சாண்டில்யனின் 10 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .

மாதவியின் மனம்

மது மலர்

மலை அரசி

மஞ்சள் ஆறு

மலை வாசல்

மங்களதேவி

மன்னன் மகள்

மோகன சிலை

மோகினி வனம்

மூங்கில் கோட்டை






No comments:

Post a Comment