Monetize Your Account... Plz Click Below the Banner

Saturday, 4 June 2016

வேடிக்கை பார்ப்பவன்-நா.முத்துக்குமார் நூல் .





வேடிக்கை பார்ப்பது என்பது பொழுதுபோக்கு & அது ஒரு பாம்பாட்டியையோ அல்லது கழைக்கூத்தாடியையோ பார்க்கும் வரை. ஆனால், நா.முத்துக்குமார்வித்தியாசமாக வேடிக்கை பார்த்திருக்கிறார். இந்த சமூகத்தில் தன்னைச் சுற்றி நடந்தவற்றை புதிய கோணத்தில் கூர்ந்து பார்த்து அதன் தாக்கத்தை, வலியை, சுகத்தை, இன்பத்தை இந்த நூலில் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். விகடனில் வெளிவந்து விற்பனையில் சாதனை படைக்கும் ‘அணிலாடும் முன்றில்’ மூலமாக நமக்கு சிறந்த உரைநடையாளராக அறிமுகமான முத்துக்குமார் ‘வேடிக்கை பார்ப்பவன்’ மொழிநடையில் அடுத்தக்கட்ட பாய்ச்சலை நிகழ்த்தியிருக்கிறார். 



வடிவத்திலும், உத்தியிலும், மொழி நடையிலும் என சுயசரிதை வரலாற்றில் இது ஒரு சாதனை. இந்தக் கட்டுரைகளில் தான் சிறுவனாக இருந்தபோது தன்னை பாதித்த நிகழ்ச்சிகள், திரைப்படத் துறையில் முன்னுக்கு வரப் பாடுபட்ட தருணங்கள், பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் படித்த அனுபவங்கள், முதல் கவிதை எழுதியது, பின்னர் கவி மேடைகளுக்குத் தலைமை தாங்கியது, பத்திரிகைத் துறையில் பணி ஆற்றியது, உதவி இயக்குனராகப் பணி ஆற்றியது, பணி ஆற்றிக் கொண்டே சில காலம் படித்தது, பிரபலமான நண்பர்களைப் பற்றி எனப் பரவலாக தன் அனுபவங்களை வாசகர்கள் கண்முன் படம்பிடித்துக் காட்டுகிறார். 

ஆனந்த விகடனில் ‘வேடிக்கை பார்ப்பவன்’ என்ற தலைப்பில் தொடராக வந்து வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற கட்டுரைகள் இப்போது நூல் வடிவில் உங்கள் கைகளில்.

வேடிக்கை பார்ப்பவன்-நா.முத்துக்குமார்





No comments:

Post a Comment