Monetize Your Account... Plz Click Below the Banner

Wednesday 29 June 2016

’தண்ணீர்’’ - அசோகமித்திரன் மாஸ்டர் பீஸ் நாவலை டவுன்லோட் செய்ய

’தண்ணீர்’’ - அசோகமித்திரன் மாஸ்டர் பீஸ் நாவலை டவுன்லோட் செய்ய 





சுருண்டோடும் வாழ்க்கைநதியின் சித்திரத்தை அசோகமித்திரன் படைப்புகள் நமக்குத் தருவதில்லை. அவை துளியில் ஆழ்ந்துவிடும் தன்மை உடையவை. அத்துளிகளில் நதியின் பிரம்மாண்டத்தை எப்போதும் அடக்கிக் காட்டுவதில் அசோகமித்திரன் வெற்றி பெறுகிறார்" என்கிறார் ஜெயமோகன். அதற்கு சரியான எடுத்துக்காட்டு அவரது 'தண்ணீர்' நாவல். நதியின் பரபரப்பான வேகமின்றி, சிறு ஓடை ஒன்றின் பாம்பின் ஊர்தல் போல நாவல் மெதுவாக நகரத் தொடங் குகிறது. ஆனால் போகப்போக கீழே வைத்துவிட முடியாதபடி வேகம் கொண்டு நாவல் பிரவகிக்கிறது. பிரச்சினை நாம் தினசரி வாழ்வில் எதிர் கொள்வதுதான். தண்ணீர்ப் பிரச்சினை - நாவலில் காட்டப்படும் களமான சென்னை என்றில்லாமல் இப்போது நாடு முழுதும் - ஏன் உலகம் முழுதும் வியாபித்துள்ளது. இது சென்னை போன்ற பெரு நகரங்களில் மிகவும் கூர்மையாக மக்களின் உறவுகளைப் பாதிப்பதாக இருப்பதை - பார்ப்பதற்குத் துளியாகத் தோன்றினாலும் ஒருபெரு வெள்ளத்தைப்போல் மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுவதைக் குறியீடாக நாவல் சித்தரிக்கிறது.

நாவலில் முழுக்கவும் நகரத்தின் மையத்தில் வாழ்கிற மிடில்கிளாஸ் மக்களின் வாழ்க்கையை பதிவுசெய்திருக்கிறார். திராவிட இயக்கங்கள் உச்சம் பெற்றுவிட்ட துவக்க காலத்தில் அவருக்கு பிரமாணர்கள் ஒடுக்கப்படுவதாக ஒரு கவலை இருந்திருக்கலாம். அதனால் உண்டான கோபமும் சீற்றமும் பல இடங்களில் காட்சிகளின் வழியாகவும் பாத்திரங்களின் வழியாகவும் சொல்லப்படுகிறது. சினிமாக்காரனை நம்பி வாழ்க்கையை தொலைத்த ஒரு அப்பாவி பெண் பாத்திரங்களையும் அனேகமாக சினிமாவில் சீரியல்களிலும் போட்டு துவைத்து எடுத்துவிட்டதால் ஜமுனாவின் பாத்திரமும் என்னமோ ஒட்டவே இல்லை. சாயாவும் கூட பாலச்சந்தர் படங்களில் பார்த்த ரகமாக இருக்க கதையில் ஒரு சில அத்தியாயங்களில் வந்துபோகும் ‘’டீச்சர்’’ அவ்வளவு ஈர்த்தார். ஜமுனாவிடம் டீச்சர் பேசுகிற நான்கு பக்கங்களையும் மீண்டும் மீண்டும் படித்தேன். அவ்வளவு சுவாரஸ்யம். ஜமுனாவின் அம்மா வருகிற அத்தியாயமும் தனிச்சிறுகதைக்கான அம்சங்களைக் கொண்டது. 
 அசோகமித்திரன் இந்நாவலில் கையாண்டிருக்கிற மொழி எவ்வித பாசாங்குகளும் அற்ற எளிமையான ஒன்று. அதுதான் இந்நாவலின் பலமே. அடுத்து அவர் தேர்ந்தெடுக்கிற பயன்படுத்துகிற சொற்கள். எங்குமே அந்நியமான சொற்களோ தன்னுடைய மேதாவித்தனத்தை வெளிப்படுத்துகிற மொழியோ இல்லை. எதையுமே மைக்போட்டு சொல்லாமல் எல்லாவற்றையும் காட்சிகளின் வழி வாசகனுக்கு கடத்துகிறார். தான் சொல்ல விரும்பியதை மட்டும் நறுக்கென சொல்கிறார். அதற்குமேல் ஒரு சொல் கூட கூடுதலாக இல்லை.  








No comments:

Post a Comment