Monetize Your Account... Plz Click Below the Banner

Wednesday, 15 June 2016

மாதொரு பாகன் - எழுத்தாளர் பெருமாள் முருகனின் சர்ச்சை நாவல்







எழுத்தாளர் பெருமாள் முருகனின், 'மாதொரு பாகன்' என்ற நாவல், 'திருச்செங்கோட்டில் உள்ள மக்களையும், இந்து பெண்களையும் இழிவுபடுத்துகிறது எனக் கூறி, அந்த நாவலுக்கு தடை விதிக்க வேண்டும்' என, இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன. இது, தமிழகத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நூல் ஆசிரியர் பெருமாள் முருகன் கூறியதாவது: கடந்த, 1940 களில் நடந்த, ஒரு சம்பவம் தொடர்பான நாவல், 'மாதொரு பாகன்!' குழந்தை இல்லாத தம்பதிகள் படும் துயரமும், சமூகம், அவர்களை எப்படி பார்க்கிறது என்பது குறித்தும் விவாதிப்பது தான் இந்நூல். தற்போது, நாடு முழுவதும், செயற்கை கருத்தரிப்பு மையங்கள் செயல்படுகின்றன. 100 ஆண்டுகளுக்கு முன், இப்படிப்பட்ட அறிவியல் வளர்ச்சி இல்லாத சூழலில், குழந்தை பேற்றுக்காக பல்வேறு முறைகளை கையாண்டுள்ளனர். அதுபோன்ற சமூக வழக்கத்தை தான், பல்வேறு ஆதாரங்களுடன், கற்பனை கதாபாத்திரங்கள் மூலம், நூலில் விவரித்துள்ளேன். இதற்காக, கற்பனையாக ஒரு ஊரையும் தேர்ந்தெடுத்து சொல்லியிருக்கிறேன். குழந்தைப் பேறு இல்லாத ஒரு பெண்ணை, ஊரில் நடக்கும் திருவிழாவிற்கு, அவ்வூர் மக்கள் அனுப்புகின்றனர். அந்த திருவிழாவில், தனக்கு பிடித்த ஒரு ஆடவனை தேர்ந்தெடுத்து, அந்த பெண் குழந்தைப் பேறு பெறுகிறாள். இது தான், 'மாதொரு பாகன்' கதை. இப்படி பிள்ளைப் பேறு பெற வேண்டும் என்பதற்காக, நாயகியை உறவுக்காரர்கள் திருவிழாவிற்கு அனுப்ப முடிவெடுக்க, நாயகன் மறுக்கிறான். இருந்தும் நாயகி, வலுக்கட்டாயமாக அனுப்பி வைக்கப்பட்டு பிள்ளை பேறு நிலையை எட்டுகிறார். இது பிடிக்காததால், நாயகன் தற்கொலைக்கு முயல்கிறான். 'பாண்டவர்கள், திருதிராஷ்டிரன் ஆகியோர் பிறந்ததும், இந்த முறையில் தான்' என, மகாபாரதம் சொல்கிறது. இதையெல்லாம் வைத்துத்தான் கதை பின்னப்பட்டுள்ளது. கதையில் சொல்லப்பட்டிருக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் சான்று உள்ளதோடு, நாட்டார் வழக்கு ஆவணங்களும் உள்ளன. பத்து ஆண்டுகளுக்கு முன், முக்தா சீனிவாசனின், 'அவன் அவள் அது' படமும், பாலச்சந்தரின், 'கல்கி' படமும் கூட, வாடகைத் தாயின் கதையை சித்தரிப்பவை தான். எந்த இடத்திலும், சமூகம் பயன்படுத்திய வழக்கத்தை, நியாயம் என்றோ தவறென்றோ, நான் சொல்லவில்லை. ஆனால், நாவலின் சில பக்கங்களை மட்டும் எடுத்துக் கொண்டு, அதை தடை செய்யக் கோருவதும், என்னை கைது செய்ய வேண்டும் எனச் சொல்வதும், ஜனநாயக ரீதியிலான அணுகுமுறை அல்ல. கருத்துக்கு எதிர் கருத்து சொல்லலாம்; இல்லை, சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கலாம். அதை விட்டு, போராட்டம் நடத்துவதும், நூலை எரிப்பதும் சரியான அணுகுமுறை இல்லை.



மாதொரு பாகன் - எழுத்தாளர் பெருமாள் முருகனின் சர்ச்சை நாவல்





No comments:

Post a Comment