போர்க்களங்கள் அழிவை மட்டுமே உணர்த்த வில்லை. பிணக்குவியல்களுக்கிடையே ஞானம் பூக்கிறது. வாள் சப்தங்களுக்கிடையே
வாய்மையும் சத்தமிடுகிறது. குருக்ஷேத்திரம் இடைவிடா 18 நாள் போர். சங்கொலிப்பது கேட்கிறதா. புரவி தெறிந்து ஒடுவது தெரிகிறது. கஜப் பிளிறல் காதை முட்டுகிறதா.வாருங்கள், போரைப் பார்வையிடுவோம்.நடந்தது அந்த நாள், முடிந்ததா பாரதம் ஒரு சினிமா பார்ப்பது போல குருக்ஷேத்திரம் நம் கண்முன் விரிகிறது. வெற்றிதான் முக்கியம் எனத் தூர்மானித்துவிட்ட மனிதன், எப்படியெல்லாம் மாறிவிடுகிறான். போர்க்களம். வெற்றி தோல்வியை மட்டும் தரவில்லை, பரிசாகவும் படிப்பினையாகவும் தருகிறது. சூடு பறக்கும் இந்நூலை, நாம் புரட்டத் தொடங்கலாமா.
குருக்ஷேத்திரம்
No comments:
Post a Comment